நிவேதா பெத்துராஜ் நடித்த "டிக் டிக் டிக்' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும், விஜய் ஆண்டனி ஜோடியாக "திமிரு பிடிச்சவன்' படத்திலும், பிரபுதேவா ஜோடியாக "பொன் மாணிக்கவேல்' படத்திலும் நடித்துவருகிறார். ஏ.சி. முகில் இயக்கும் "பொன் மாணிக்கவேல்' படத்தில் பிரபுதேவா உதவி கமிஷனர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

neetha

இந்தப் படத்தில் நிவேதாவுக்கும் போலீஸ் வேடம் என்று கூறப்படும் நிலையில் அவர் இதற்காக சிறப்பு வகுப்புகளுக்கு சென்று சண்டைப்பயிற்சி எடுத்துவருகிறார். படத்தில் நிவேதாவிற்கு சண்டைக்காட்சிகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.